Latestமலேசியா

KLIA-வை SIA-வாக மாற்றுக – சிலாங்கூர் ஆட்சிக் குழு பரித்துரை

கோலாலம்பூர், ஏப். 18 – கோலாலம்பூர் அனைத்துலக ஏர்போர்ட்(KLIA) விமான நிலையத்தை சிப்பாங் அனைத்துலக ஏர்போர்ட் (SIA) எனும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென  சிலாங்கூர் ஆட்சிக்குழு பரித்துரைக்க முயன்று வருவதாகச் செய்திகள்  கசிந்துள்ளன.

அந்தப் பரிந்துரையை ஊராட்சி மன்றம், பொதுப் போக்குவரத்து மற்றும் புதுக் கிராம மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் பரிதுரைத்துள்ளதாகவும் அந்த விமான நிலையம் சிலாங்கூரில் உள்ள சிப்பாங்கில் இருப்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகில் சில நாடுகளில், குறிப்பாக ஜப்பானின் நரித்தா/ஹனேடா, சோலில் இன்டியோன், தாய்லாந்தில் சுவர்ணபூமி, கோங்சுவில் பாய்யுன், ஷாங்காயில் பூடோங், ஆம்டர்டாமில் சிபோல்  ஆகிய விமானநிலையங்கள் அமைந்திருக்கும் இடத்தை வைத்தே பெயரிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே அது பற்றிக் கேட்டபோது, பெயர் மாற்றம் பற்றிய கோரிக்கையை தாம் இன்னும் பெறவில்லை என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker