Latestஉலகம்

அடுத்த ஓட்டு ரஜினிக்கே ஹேஸ்டேக் முன்னிலை !

சென்னை, ஏப். 19, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், “அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஜேஸ்டேக்”கை அவரது ஆதரவாளர்கள் உருவாக்கி இந்திய அளவில் முன்னிலைப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று முடிந்தது. இத்தேர்தலில் போட்டியிடாமல் ரஜினி ஒதுங்கி கொண்டார்.

சட்டசபை தேர்தல் தான் என் இலக்கு என கூறியுள்ள ரஜினி, இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்திருந்தார். தற்போது ரஜினி நடித்து வரும் தர்பார் உட்பட கூடுதலாக ஒரு படத்தில்  நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்குள் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்து அரசியல் களத்தில் இறங்க உள்ளார்.

இந்நிலையில் ரஜினி ஆதரவாளர்கள் “அடுத்த ஓட்டு ரஜினிக்கே” என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை இந்திய அளவில் முன்னிலைப்படுத்தி உள்ளனர். அதில் 2021 ஆம் ஆண்டுக்காக காத்திருக்கிறோம் என அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் டுவிட் செய்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker