Latestஉலகம்

அப்பாவிற்காக யோசிக்காமல் கல்லீரலை தானம் செய்த மகள்!

மும்பை, ஏப்.19- இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் புகைப்படம் ஒன்று தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல தொழிலதிபரும் ஆர்.பி.ஜி குரூப் நிறுவனத்தின் தலைவருமான ஹார்ஸ் கோங்கா இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் தந்தை மற்றும் மகள் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

அதில் 19 வயதான ராக்கி டத்தா என்ற இளம் பெண் தன்னுடைய தந்தை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து  எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தன்னுடைய கல்லீரலை  65% தானமாக கொடுத்துள்ளார். பொதுவாகவே பெண்களுக்கு அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு சிலர், “பெண்கள் பொதுவாக பயனற்றவர்கள் என்று கூறுவதற்கு இந்த புகைப்படம் பதில் கூறிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராக்கி டத்தா. இதைத் கண்ட இணையவாசிகள் ராக்கி டத்தாவின் இந்த மிகப் பெரிய குணத்தை பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker