Latestமலேசியா

இரும்பினால் மனைவியை தாக்கிய கணவர் கைது !

லாஹட் டத்து  ஏப்.19 – கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தன்னை  56 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியினால் தாக்கியதாகக் கணவரின் மீது புகார் கொடுத்த  26 வயதுடைய பெண்ணின் புகாரை அடுத்து,  நேற்று அப்பெண்ணின் கணவரை கம்போங்  தாபனாக்கில் இருக்கும்  வீட்டிலிருந்து  போலீசார் கைது செய்தனர்.

36 வயதுடைய அந்த ஆடவன் வீட்டில் ஒய்வு எடுத்து கொண்டிருந்ததை உணர்ந்த மனைவி, அது பற்றிப் போலீசாருக்குத் தெரிவித்தார்.   அங்கு விரைந்த போலீசார் நேற்றிரவு 10.30 மணியளவில் அவனை கைது செய்ததாக    லாஹட் டத்து மாவட்ட காவல்துறைத் தலைவர் நஸ்ரி மான்சோர் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று  மதியம் 6 மணியளவில் அந்தத் தம்பதியினருக்கிடையே வாக்குவாதம் முண்டது. வாக்குவாதத்தின்போது கணவர் மனைவியின்  தலையில் குத்தியதைத் தொடர்ந்து இரத்தம் வரும் அளவிற்கு முகத்தில் எத்தியதாகவும்  புகார்  செய்யப்பட்டது.

கணவர் தம்மை கண்மூடித்தனமாக இரும்புக் கம்பியினால்  தலையிலும் உடலின் பின்பாகத்திலும்  தாக்கியதாகவும், பின்னர்  ‘டாம்பேல்’ எனப்படும் ஓர் உடற்பயிற்சிக் கருவியைக் கொண்டும் அந்தப் பெண்ணை தாக்கியதாக அவர்  புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய வளர்ப்புப் பிள்ளையையும் அவர் அடித்துத் துன்புறுத்துயதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 7 மணியளவில்  வீட்டுக்குத் திரும்பிய அவரது  கணவர் மீண்டும் மனைவியைத் தாக்க முற்பட்டதை அடுத்து தன்னுடைய நலனுக்காவும் பிள்ளையின் பாதுகாப்பைக்  கருத்தில் கொண்டும் அந்த மனைவி உடனடியாக இது பற்றிப் போலீசுக்குப் புகார் அளித்ததாக   நஸ்ரி மான்சோர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker