Latestஉலகம்

உடை மாற்றும் இடத்தில் 80 மாணவிகளை வீடியோ எடுத்த பயிற்சியாளர் கைது!

சூரிச், ஏப். 19- சுவிஸ் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர், பள்ளி மாணவிகள் உடைமாற்றும் போதும் நீச்சல் குளத்தில் நீந்தும் முன் குளிக்கும் இடத்திலும் ரகசியமாக வீடியோ எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.  அப்பயிற்சியாளர்  80 மாணவிகளை படம் பிடித்ததையும் பின் அதனை வீடியோவாக பதிவும் செய்துள்ளார். குறைந்தது ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளை நீச்சல் குளம் ஒன்றில் வீடியோ எடுத்துள்ளார்.

நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த ஒரு மாணவி, அந்த பயிற்சியாளர் தனது செல்போனை மறைத்து வைத்து போட்டோ எடுப்பதை கண்டு அதைப் பறித்து பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் தான் ரகசியமாக புகைப்படங்களை எடுத்ததையும் அவற்றை வீடியோவாக்கியதையும்  அந்த 21 வயதுடைய கால்பந்து பயிற்சியாளர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட அந்த பயிற்சியாளர் தனது பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதோடு அந்த பகுதியில் நடைபெறும் விளையாட்டு தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு தான் தயாரித்த வீடியோக்களை அவர் இணையத்தில் பகிரவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker