Latestமலேசியா

ஏப்ரல் 24இல் நீர் துண்டிப்பு – கிள்ளான் பள்ளத்தாக்கில் 4 மில்லியன் பேர் பாதிப்பு

புத்ரா ஜெயா, ஏப். 19 –  கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 24ஆம் தேதி பெரிய அளவிலான நீர் துண்டிப்பு ஏற்படுவதாகவும் அதில் 6 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இதுவே மிகப் பேரிய நீர் துண்டிப்பு என்றும் 86 மணி நேரம் நீட்டிக்கப்படும் என நம்பப்படும் இந்த நீர் துண்டிப்பு படிப்படியாக சீரடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 2 நாள்களுக்கு வேண்டிய நீரைச் சேமித்து வைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

6 லட்சத்து 20 ஆயிரத்து 835 நீர் கணக்கு வைத்திருப்போர் அல்லது 4 மில்லியனே 143 ஆயிரத்து 465 பேர் இதில் பாதிக்கப்படுவர் என்றும் கிள்ளான், ஷா ஆலம், பெட்டாலிங், கோம்பாக், கோலாலம்பூர், கோலாலம்பூர் மற்றும் கோல சிலாங்கூர் பகுதி மக்கள் போதிய நீரைச் சேமித்து வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனைடையே நீர் ஆணையமான ஸ்பானின் தலைவர் சார்லஸ் சந்தியாகோ, இந்த நீர் தடங்கல் தவிர்க்க முடியாதது என்றும் சிலாங்கூர் ஆற்றின் 2ஆவது சுத்திகரிப்பு ஆலையின் 32 கிலோ வாட் மின் இணைப்பு பழுது பார்க்கப்படுவதற்காக நீர் துண்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அது உடனடியாகப் பழுது பார்க்கப்பட வேண்டுமென்றும் என்றும் மே 1 விடுமுறை மற்றும் நோன்புப் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முன்பாகவே  கட்டாயமாகச் பழுது பார்க்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker