Latestமலேசியா

தங்கம் தேடும்போது நிலச்சரிவில் சிக்கிய 17 வயது இளைஞன் !

குவாந்தான், ஏப். 19 –,  தங்கம் தேடும்போது, நிலச்சரிவில் சிக்கிய 17 வயது இளைஞன் ஒருவன் மரணமடைந்தான்.

இச்சம்பவம் கோல கிராய், லாடாங்  பொக்கஸ் போனான்ஸா, டாபோங்கில் நேற்று நடந்துள்ளது. நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் அமிராச்ராப் அஸ்மான் (வயது 17) தமது குடும்பத்தாருடன் ஆற்று நீரில் தங்கத்திற்காக மண்ணை அலசிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த மண் சரிந்து அதில் அவன் புதைந்து போனான்.

அவனது தகப்பனாரும் மற்றவர்களும் அவனை மீட்க கடுமையாகப் போராடி மாலை 6.40 மணியளவில் அவனை மீட்டு, டாபோங்  அரசு கிளினிக்கிற்கு எடுத்துச் சென்றனர். அவருக்கு வெளிக்காயம் எதுவும் ஏற்படவில்லை ஆனால், அவர் இறந்து விட்டதாக அறிவிக்கபட்டது. பிரேத பரிசோசனைக்காக அவரின் உடல் கோல கிராய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker