Latestமலேசியா

திடிர் பணக்காரத் திட்டம் – ஏமாந்த கிராப் ஓட்டுனர் !

கோலாலம்பூர், ஏப்ரல் 19 – திடிர் பணக்காரத் திட்டத்தினால் ஏமாந்து தற்போது 10 ஆண்டுக் கால சிறை தண்டணையை எதிர்நோக்கியுள்ளார் பே என அடையாளம் காணப்பட்டுள்ள கிராப் ஓட்டுனர் ஒருவர்.
சில மாதங்களுக்கு முன்பு, சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வேலை வாய்ப்பு விளம்பரத்தில் பதிவு செய்துள்ளார் பே. அதன் பிறகு வீ சேட் மூலாம் மார்க்கோ எனும் ஆடவனுடன் தொடர்புக் கொண்டும் பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஶ்ரீ கெம்பாங்கானில் பேவைச் சந்தித்த அந்த ஆடவன், இந்த வேலை வாய்ப்பு மூலம் கிடைக்கப்பெறும் கமிஷன் பணத்தை போடுவதற்கு பேவை 6 வங்கி கணக்குகளை திறக்குமாறு கூறியுள்ளான்.
அதன்படியே கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் திகதி புதிதாய் தொடங்கிய 4 வங்கி கணக்கின் விவரங்களை மார்க்கோவிடம் வழங்கியுள்ளார் பே.
இதற்கிடையில், ஜனவரி 21 ஆம் திகதி, சம்பந்தப்பட்ட ஒரு வங்கியிலிருந்து பேவிற்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதி, பேவின் வங்கி கணக்கு ஏமாற்று வேலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மற்றொரு வங்கியிலும் அழைப்பு வந்தவுடன், பே தன்னுடைய 4 வங்கி கணக்குகளையும் மூடிவிட்டு காவல்துறையில் புகார் ஒன்றையும் செய்துள்ளார். இதனை அடுத்து, மார்ச் 22ஆம் திகதி பேவிடம் விசாரணை நடத்திய போலிசார், அவருடைய வங்கி கணக்கு ரிம 30,000 பெருமானமுள்ள 3 பணமோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பணமோசடி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கில் பேவிற்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து தற்போது, மசீசா-வின் பொது சேவைகள் மற்றும் புகார்கள் துறை பேவிற்கு சட்ட ரீதியில் உதவி செய்ய முன்வந்துள்ளதாக பே கூறியுள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker