Latestமலேசியா

பக்காத்தான் மீது இந்தியர்கள் பொறுமை இழப்பா?

கிள்ளான், ஏப். 19 – பக்காத்தான் ஹராப்பான் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும் இந்தியர்கள் அதன் மீது அதிருப்தி கொண்டிப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் ஒரு பிரிவினர் உடனடி மாற்றங்களை வேண்டுவதாக அவர் குறிப்பிட்டார் அவர் முந்தைய அரசினால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு விடிவு காலம் வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

ஆயினும், முந்தைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய கால அவகாசம் தேவைப்படுவதை இந்திய சமூகம் உணர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அது சம்பந்தமாகக் குறிப்பிட்ட சார்லஸ் சந்தியாகோ, தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாததை எதிர்த்து பெரும்பாலோர் சமூக ஊடகங்களில் எழுதி வருவதாகக் குறிப்பிட்டார்.

அண்மையில் எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற இந்திய மாணவர்கள் பலர் மெட்ரிகுலேஷன் பட்டியலில் இருந்து விடுபட்டது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்கள் ஏன் புறக்கணிக்கப்பட்டனர் என்பதை அரசு விளக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அது தீர்க்கப்படவில்லை என்றால், இது பக்காத்தனுக்குச் சரிவைக் கொண்டுவரும் என குணராஜ் ஜோர்ஜ் எச்சரித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker