Latestமலேசியா

பறக்கும் விமானத்தில் ஆஸ்திரேலியப் பெண்ணைக் காப்பாற்றிய இந்திய டாக்டர் தம்பதியர் !

இந்தியா, ஏப். 19 – விமானத்தில் உயிருக்குப் போராடிய ஆஸ்திரேலிய பெண்ணைக் காப்பாற்றிய இந்திய மருத்துவ தம்பதியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

இந்தியா, மஹாராஸ்ட்ராவைச் சேர்ந்த டாக்டர் நிதின் மற்றும் டாக்டர் நீத்தா ஸாபக் தம்பதியர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏப்ரல் 11ஆம் தேதி சிங்கப்பூர் விமானத்தின் மூலம்   திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் விமானம் பெர்த்திலிருந்து இரவு 9.10மணிக்குப் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், ஆஸ்திரேலிய பெண்மணி ஒருவர் மயக்கமுற்று உயிருக்குப் போராடி வருவதாகவும் அவரைக் காப்பாற்ற உதவி வேண்டுமென விமானப் பணியாளர்கள் கேட்டுள்ளனர்.

63 வயதான ஏன்னி என்பவர், உடல் முழுவதும் வியர்த்து, சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளியேறிதோடு மயக்கமுற்றுள்ளார்.

இந்திய மருத்துவத் தம்பதியர், நிலைமையை உணர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையிலும்   மனம் தளராமல் சிகிச்சை  அளிக்க முயன்றனர்.

ஆஸ்ப்ரின் மருந்தைக் கொடுத்து அவரின் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தினர். அந்த ஆஸ்திரேலிய மாதுவின் நிலை சற்று சீரானதால், விமானி உலுரு என்ற இடத்தில் தரையிறங்கலாமா என கேட்டபோது, அது தேவையில்லை. விமானம் சிங்கப்பூர் சாங்கியில் இறங்கினால் போதும் என்றும் அந்த மருத்துவத் தம்பதியர் கூறியிருக்கின்றனர்.

விமானம் சாங்கி விமான நிலையத்தில் இறங்கிய பின்னர், சம்பந்தப்பட்ட ஏன்னி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்திய மருத்துவத் தம்பதியில் மும்பாயை சனிக்கிழமை சென்றடைந்தனர். இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஏன்னியின் நிலை சீராக இருப்பதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆஸ்திரேலிய மாதுவுக்கு ஹைபோக்சியா எனும் நோய் தாக்கியிருப்பதாகவும், உடலில் ஒரு பாகத்தில் பிராண வாயு கிடைக்காமல், தசைகளில் நீரில்லாத இந்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ தம்பதியரின் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி பயணிகளும் விமானப் பணியாளர்களும் விமானத்திலேயே அவர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தனர். ஒரு பரிசுக் கூடை ஒன்றும் வழங்கபட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker