Latestமலேசியா

பிரசன்னா டிக்‌ஷாவை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் – இங்காட் மகஜர் 

புத்ராஜெயா, ஏப். 19 – இந்திரா காந்தியின் இளைய மகள் பிரசன்னா டிக்‌ஷாவைத் தேடிக் கண்டுபிடிக்க இங்காட் எனும் இந்திரா காந்தி நடவடிக்கை குழு இன்று உள்துறை அமைச்சு, சுஹாகாம் மற்றும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்குச் சென்று மகஜர் ஒன்றினை வழங்கியுள்ளது.

இந்திரா காந்தியின் இளைய மகள் பிரசன்னா டிக்சாவை தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் அந்த முயற்சிக்கு சிறப்பு போலீஸ் அணியை உருவாக்க வேண்டும் என்றும் அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல வருடங்களாக தேடப்பட்டு வரும் பிரசன்னா டிக்க்ஷாவை  தேடி மீட்டு தருவதற்கு நீதிமன்ற போராட்டத்தில் வெற்றிப் பெற்றிருந்தாலும் இன்னும் நேரடியாக தன்னிடம் வந்துச் சேராத பட்சத்தில் தாய் இந்திரா காந்தியின் சோகக் கதைக்கு ஒரு விடிவு கிடைக்குமா என்பதே தற்போதைய கேள்வியாக சமூக ஆர்வளர்கள் மத்தியில் நிலவுகிறது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker