Latestமலேசியா

பெண் மானபங்கம் – ஆடவர் கைது

ஜொகூர் பாரு, ஏப். 19 – கோத்தா திங்கியில் பெண்ணொருவரிடம் தகாத முறையில், அநாகரிகமாக நடந்து கொண்ட காப்புறுதி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதன் கிழமை, ஏப்ரல் 17ஆம் தேதி  காலையில் அவரின் அலுவலகத்துக்குச் சென்ற பெண்ணிடம் அந்த நபர்(வயது 50) தமது மர்ம உறுப்பைக் காட்டி மானபங்கம் செய்ய முயன்றதாகவும்  அவர் நேற்று மாலை 6.15 மணியளவில கைது செய்யபட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மோன் பாஜா தெரிவித்தார்.

காலை 8.30க்கு நடந்த அந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுவார் என தெரிகிறது.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker