Latestமலேசியா

மீண்டும் வந்துவிட்டது ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி !

கோலாலம்பூர், ஏப்.19 – திறமையான படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் படைப்புகளை அங்கீகரிக்கும் நோக்கத்தில் ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டி கடந்த 2009-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில்,  இவ்வாண்டு  9-வது முறையாக நடைபெறவுள்ள ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டியில் 18 வயதுக்கு மேம்பட்ட மலேசியர்கள் கலந்துகொள்ளலாம். போட்டியாளர்கள் 13-15 நிமிடங்களுக்குள் ஒரு குறும்படத்தைத் தயாரிக்க வேண்டும்.

இந்தப் போட்டியின் பரிசு குறித்த விவரங்கள் கீழ் வருமாறு :

முதல் நிலை வெற்றியாளர் : ரிம 10,001 ரொக்கப் பரிசு

இரண்டாம் நிலை வெற்றியாளர் : ரிம 7,501 ரொக்கப் பரிசு

மூன்றாம் நிலை வெற்றியாளர்:  ரிம 5,001 ரொக்கப் பரிசு

ஆறுதல் பரிசுகள் : ரிம 2,501  ரொக்கப் பரிசு  X 6 பேர்

வெற்றி பெறும் அனைத்து குறும்படங்களும் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் ஆஸ்ட்ரோ கோ செயலியில் ஒளிபரப்பப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆஸ்ட்ரோ உலகம் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடி, அங்குள்ள இப்போட்டியின் விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து ஏற்பாட்டாளர்களுக்கு  அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டி குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் பெற்று கொள்ளலாம்.

எதிர்வரும் மே 14-ஆம் தேதி மாலை 6.00 மணிக்குள் தங்களுடைய படைப்புகள் அனுப்பி வைக்க வேண்டும். ஆஸ்ட்ரோ வானவில் குறும்படப் போட்டியை குறித்து மேல் விவரங்களை அறிய www.astroulagam.com.my/shortfilm என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker