Latestமலேசியா

ஈஸ்டர் பெருநாள் வாழ்த்து – அனினாவின் மீது சாடல்

கோத்தா கினபாலு, ஏப். 20 – கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பெருநாள் சம்பந்தமாக வைக்கப்பட்ட வாழ்த்து விளம்பரப் பலகையின் மீது கேள்வி எழுப்பிய அனினா சாடுடின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

பிரிபூமி பெர்சத்துவின் முன்னாள் மகளிர் தலைவியான அனினா, அம்மாதிரியான வாழ்த்துகள் பெரும்பாலும் பாதாகைகளின் மூலமே வெளியிடப்பட்டு வந்துள்ளது.  ஆனால், தற்போது அது நிரந்தரமான விளம்பரப் பலகையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தமது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் உயரத்தைக் கூட்டுங்கள், கிரேனைப் பயன்படுத்துங்கள். அது பெரிதாக இல்லையென்றால், அதனை இரட்டிப்பாக்குங்கள். அடுத்தாண்டு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்புங்கள். நாமெல்லோரும் சரிசமம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நான்கு நாள் கொண்டாட்டத்தின் தொடர்பில் சபா புக்கிட் பாடாங்  மேரி மாதா தேவாலய வளாகத்திலும் மாநிலம் முழுவதும் தேவாலய வளாகங்களிலும் அம்மாதிரியான வாழ்த்துப் பலகைகள் வைக்கப் பட்டுள்ளன. அந்த விளம்பரப் பலகைகளில் மலாய் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

அது பற்றிப் பல சமூக ஆர்வலர்கள், அனினாவை கடுமையாகச் சாடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மலேசியாவில் அனைத்து சமயங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  வாழ்த்து விளம்பரப் பலகைகள் யாரையும் பாதிக்கவில்லை. அது பற்றி தரக்குறைவான, கிண்டலான  விமர்சனம் தேவையற்றது. மேலும் நோன்புப் பெருநாள் விரைவில் கொண்டாடப்படவிருக்கிறது. அது சம்பந்தமாக நாடு முழுமையிலும்  வாழ்த்து விளம்பரங்கள் வைக்கப்படும். அதனை எந்த கிறிஸ்துவரும் விமர்சனம் செய்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இது போன்ற சமய உணர்வுகளைத் தூண்டி அறிக்கை விடுவது சமயங்களுக்கிடையே பிரிவினையையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தும் என கருத்து கூறப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker