Latestமலேசியா

உதவி செய்ய நினைத்தால் உடனே செய்ய வேண்டும் – டாக்டர் அருணன்

கோலாலம்பூர், ஏப். 20 – விவாகரத்து வழக்குகளில் நிபுணத்துவம் வாய்ந்த   டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ் 2019ஆம் ஆண்டில் நிறுவன பங்காளித்துவத்தில் தலை சிறந்தவராக ஏசியன் லீகல் பிசிசனஸ் அமைப்பினால்  தேர்வு செய்யப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டுள்ளார்.

திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதில் தலை சிறந்து மிளிர்கிறார்.


நேரத்தை திறமையாகக் கையாண்டால் பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையை ஆற்ற முடியும் என கூறும் இவர்,  அதிகாலை 5 மணிக்கு எழுந்ததிலிருந்து தமது பொதுச் சேவையைத் தொடங்குகிறார்.
பல அலுவல்களுக்கும்  இடையே அவர் எழுதி வெளியிட்ட ‘திருமணத்தைக் காப்பாற்றுவது எப்படி’ எனும் புத்தகத்தின் வருமானத்தை தேசிய புற்றுநோய் கழகத்திற்கு அளித்துள்ளார். அவரின் ‘வாழ்வின் தொடக்கம்- அன்பு எப்போதும் மறைவதில்லை’ என்ற  இரண்டாவது புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

விவாகரத்து கோரி வரும் தம்பதியருக்கு முதலில் அதனை வாங்கித்தர தாம் முயல்வதில்லை என்றும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மனநல ஆலோசனை வழங்கி அதனைத் தீர்க்க உதவுவதாகக் குறிப்பிடுகிறார். மனம் விட்டுப் பேசினால், மற்றவர்களின் கருத்துக்கு மரியாதை கொடுத்தால், பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணலாம் என கூறும் அவர்,  விவாகரத்து என்பது எல்லா முயற்சியும் தோல்வியடைந்து இறுதியாக இருக்க வேண்டுமென கருதுகிறார்.

அருணன் தமது ரெயின்போ அணியின் மூலம் வசதி குறைந்தோருக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மேலும் ஜோம் போத்தாக் எனும் அமைப்பின் மூலம்  புற்றுநோய் விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியும் வருகிறார்.

அண்மையில் புஞ்சாக் ஹராப்பான் எனும் நிகழ்ச்சியின் மூலம்  பேறு குறைந்த சில இளைஞர்களைச் சபாவின் கோத்தா கினபாலு மலைக்குக் கொண்டு சென்று, மலையேற வைத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பொதுச் சேவை செய்ய கால நேரம் பார்க்கக் கூடாதென்றும்,  பொதுச் சேவை என்பதை வாழ்க்கையின் முக்கிய அம்சமாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோரிடம் பேசுவதுகூட அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என டாக்டர் அருணன் செல்வராஜ் குறிப்பிடுகிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker