Latestஉலகம்

இலங்கை ஆலயம் , தேவாலயங்கள், ஹோட்டலில் குண்டு வெடிப்பு! 160 பேர் மரணம்!

கொழும்பு, ஏப்.21- இலங்கையில் பல்வேறு பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்
பட்டுள்ளது.

இந்த வெடி குண்டுத் தாக்குதல்களால் இலங்கை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. தேவாலயங்கள் மற்றும் இந்து ஆலயம் எனவழிபாட்டுத்தலங்களை இலக்காக வைத்து இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர் கொழும்பு தேவாலயத்தில் 62 பேரும், கொஞ்சிக்கடை தேவாலயத்தில் 40 பேரும் மட்டக்களப்பு ஆலயத்தில் 40 பேரும் நநட்சத்திர ஹோட்டலான சங்கிரிலாவில் 12 பேரும்  உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒட்டு மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker