Latestஉலகம்

இலங்கை குண்டுவெடிப்பு 6 டன் வெடிமருந்து! பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

கொழும்பு,ஏப்.21, இலங்கையில் 172 பேர் வரை பலியாக காரணமாக இருந்த தொடர் குண்டுவெடிப்பு பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கமாக இருக்கலாம் என்று இலங்கை பாதுகாப்புத் துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் அடுத்தடுத்து 8 குண்டு  வெடிப்பு ஏற்பட்ட நிலையில் உச்சக்கட்ட பரபரப்பு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஈஸ்டர் திருநாள் என்பதால்  இலங்கையில் வசிக்கும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். தலைநகர் கொழும்பில் கொச்சிக்கடை, நீர் கொழும்பு, கட்டுப்பிட்டியா ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் மக்கள் வழிபாடு நடத்தினர்.  அப்போது கொச்சிக்கடை தேவாலயத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. அதில் கட்டிட மேற்கூரையில் வெடிகுண்டு வெடித்தது. அதில் கட்டிட மேற்கூரை தேவாலயத்தினுள் இருக்கும் மேசைகள் அனைத்தும் சேதமடைந்தன. உள்ளே இருந்த நூற்றுக்கணக்கானோர் பீதியில் அலறினர்.

பலர் ரத்தம் சொட்ட சொட்ட அச்சத்தில் தேவாலயத்தை விட்டு வெளியே ஓடினர். என்ன நடக்கிறது என்றே சில நிமிடங்களின் யாருக்கும் புரியவில்லை. அவர்கள் அனைவரையும்  மீட்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் நிகழ்ந்த அடுத்த 30 நிமிடங்களில் சீர் கொழும்பு, கட்டுப்பிட்டியா ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் வெடிகுண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்பில் உள்ள 3 தங்கும் விடுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மட்டக்களப்பில் உள்ள அந்தோணியர் தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. மொத்தமாக 6 இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல்களில் 172 பேர் உயிரிழந்துள்ளனர். 400 அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதல்களில் 6 டன் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என இலங்கை பாதுகாப்புத் துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இன்னும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்த போதிலும் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கமாக இருக்கலாம் என்று இலங்கை சந்தேகம் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker