Latestஉலகம்

குண்டு வெடிப்பு: முன் கூட்டியே எச்சரித்த இந்தியா! இலங்கை அலட்சியமா?

கொழும்பு,ஏப் 21- இலங்கையில் இன்று நடந்த குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்குண்டு வெடிப்பு சம்பவம் 6 இடங்களில் நடந்துள்ளன. அதில் 160 பேர் உயிழந்துள்ளதாகவும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இ ருப்பதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியா எச்சரித்தும் அதிகாரிகள் போதிய கவனம் செலுத்ததால் குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நான்கு நாட்களுக்கு முன் இந்திய உளவுப் பிரிவு இலங்கையை எச்சரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்தக் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்தவொரு தலைமறைவு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை அதே வேளையில் அதிபர் சிரிசேனா தலைமையில் இலங்கை அமைச்சரவை அவசர பாதுகாப்புகூட்டத்தை நடத்தியது. மேலும் இலங்கை ராணுவத்தின் முப்படை தலைவர்கள் இடையே அவரச சந்திப்பு நடத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker