Latestஉலகம்

நயன்தாராவில் ஓர் அறிக்கையால் அதிரடி முடிவு!

சென்னை, ஏப். 21- நடிகை நயன்தாராவின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் “கொலையிதிர்காலம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் ராதாரவி, நயன்தாராவை அவதூறாக பேசியது பரபரப்பாக பேசப்பட்டது. தமிழக முதல்வர் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்த இவ்விஷயத்திற்கு நயன்தாராவும் தனது பங்கிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, உள்புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாக வழிகாட்டுதலின்படி உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா போன்ற பல கேள்விகளை நடிகர் சங்கத்திற்கு முன் வைத்தார். நயன்தாராவின் இந்த கோரிக்கைகளை தற்போது ஏற்றிருக்கும் நடிகர் சங்கம் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாக குழுவை அமைக்க முன் வந்துள்ளது.

இக்குழுவின் தலைவராக நடிகர் சங்க தலைவர் நாசரே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விஷால், கார்த்தி, குஷ்பூ , ரோகினி ,சுஹாசினி போன்றோரும் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இது தவிர நடிகர் சங்கத்திற்கு வெளியில் இருந்து ஒரு வழக்கறிஞரும் ஒரு சமூக ஆர்வலரும் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளனர். இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker