Latestஉலகம்

பாகிஸ்தானுக்கு எவ்வித நிதியுதவியும் செய்யக் கூடாது: பன்னாட்டு நிதியகத்திற்கு இந்தியா எச்சரிக்கை

வாஷிங்டன், ஏப்.21-பாகிஸ்தானுக்கு எவ்விதமான நிதியுதவியும் செய்யக் கூடாது என்று பன்னாட்டு நாணய நிதியகமான ஐஎம்எப்பை இந்தியா எச்சரித்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில், நிதி நடவடிக்கை கண்காணிப்புக் குழுவின் ஆய்வை சுட்டிக்காட்டிய இந்நிய அதிகாரிகள் இந்த கருத்தினை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.

ஜி- 7 நாடுகள் ஒன்று சேர்ந்து அமைத்திருக்கும் நிதி நடவடிக்கை கண்காணிப்புத் குழுவில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 38 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இக்குழு, ஐஎம்எப் மூலமாக பெறப்படும் நிதி மோசடியாக பயன்படுத்தப்படுகிறதா.. தீவீரவாத அமைப்புகளுக்கு செல்கிறதா என்பதை கண்டறிந்து தடுப்பதோடு அதன் அறிக்கையை வெளியிடும். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் பன்னாட்டு நிதியுதவிகள் பலவும் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்வதாக நிதி நடவடிக்கை கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது.

இதனை சுட்டிக் காட்டியிருக்கும் இந்தியா, பாகிஸ்தானுக்கு பன்னாட்டு நாணய நிதியம் எவ்வித நிதியுதவிகளையும் வழங்கக்கூடாது என எச்சரித்திருக்கிறது. ஏற்கனவே கருப்பு பட்டியலில் இருக்கும் பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கக்கூடாது என்றும் இந்தியா சுட்டிக்காடடியிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker