Latestஉலகம்

மெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு:- 13 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, ஏப். 21- மெக்சிகோ, வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவின் போது  மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இங்குள்ள ஒரு குடும்ப விழாவின் போது, மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு உட்புகுந்தார்.

அந்நபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள்,7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உரியிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிசூடு நடத்தியது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker