Latestமலேசியா

மெட்ரிகுலேஷன் பிரச்சினை அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும் – கல்வி அமைச்சு

கோலாலம்பூர், ஏப். 21 – இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் கல்வி பயில இந்திய மாணவர்களுக்குக் குறைந்த இடங்களே ஒதுக்கப்பட்டது பல்வேறு தரப்பினரின் அதிருப்திக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது.

அதனை அடுத்து,  கல்வி அமைச்சு இப்பிரச்சினையை புதன்கிழமை , ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு  எடுத்துச் செல்லும் என கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அமின் செனின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், இவ்வாண்டு கல்வி அமைச்சு இருக்கின்ற 25,000 மெட்ரிகுலேஷன் இடங்களில் 90 விழுக்காட்டை  பூமிபுத்ரா மாணவர்களுக்கும் எஞ்சிய 10 விழுக்காட்டு இடங்களை பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு ஒதுக்கும் கொள்கையை தொடர்ந்த காரணத்தினால்,  22,500 இடங்கள் பூமிபுத்ரா மாணவர்களுக்கும் பி40 தர மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது.  2,500 இடங்கள் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

எனவே, கடந்தாண்டை விட இவ்வாண்டு இந்திய மாணவர்களுக்கு குறைந்த இடங்களே கிடைத்துள்ளன.

இந்த முடிவில் சில தரப்பார் அதிருப்தியுற்றதால், அது பெரும் பிரச்சினையாக உருவாகி இருக்கின்றது.  எனவே, இதனைக் களைய இப்பிரச்சினையை வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கல்வி அமைச்சு எடுத்துச் செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அது சரியான முடிவுக்காக  அமைச்சரவையில் எடுத்து செல்லப்பட்டு   அனைத்து தரப்பினரும் திருப்தி அடையும் முடிவை எட்டும் என நம்புவோமாக என டாக்டர் அமின் செனின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker