Latestமலேசியா

லோரியை மோதியதில் காரிலிருந்த தாயும் மகளும் மரணம்!

கெர்தே, ஏப். 21 – கிழக்குக்கரை நெடுஞ்சாலையின் 312ஆவது கிலோ மீட்டரில் கெர்தேக்கு அருகில் நேர்ந்த கோர விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

சனிக்கிழமை மாலை 5.40 மணியளவில் நடந்த விபத்தில் ஜொகூர் கோத்தா திங்கியைச் சேர்ந்த ரஹிமா டாவுட்(வயது 61), மற்றும் மகள் நோராடாவியா சாலிஹுடின்(வயது 26) ஆகியோர்  சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

அந்தக் காரை ஓட்டிய சம்சுல் பாஜெரி சுடர்மான்(வயது 23) மற்றும் அவரின் தாயாரும் ரஹிமாவின் சகோதரியுமான  ரொஹனி டாவுட் (வயது 56) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் குவாந்தான் காம்பாங்கைச் சேர்ந்தவர்களாவர்.

கோல திரெங்கானுவில் இருந்து குவாந்தானுக்கு வந்து கொண்டிருந்த அவர்களின் மைவி கார் முன்னால் சென்ற மரக்கட்டைகளை ஏற்றிவந்த லோரியை மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இறந்தவர்களின் உடல்கள் காரில் சிக்கிக் கொண்டதால், பொதுமக்களின் உதவியோடு அவை வெளியே எடுக்கப்பட்டன. காயமடைந்தோர் கெமாமான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில்,  இறந்தவர்களின் உடல்களின் பிரேத  பரிசோதனைக்கு அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன என கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சைட் இப்ராஹிம் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker