Latestஉலகம்

இலங்கை குண்டு வெடிப்பு: ஆப்கான்- வங்காளதேசம்- மாலத்தீவு சந்தேக பேர்வழிகள் கைது!

கொழும்பு,ஏப். 22-   இலங்கையை தாக்கிய கோர குண்டு வெடிப்பு தொடர்பில் போலீசாரும் ராணுவமும் அதிரடியாக 13 தீவிரவாத சந்தேகப் பேர்வழிகளை கைது செய்துள்ளனர்.  இவர்களில் 10 பேர் தீவிர குற்றப்புலனாய்வு துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாத சந்தேகப் பேர்வழிகள் ஆவர். ஆப்கான், வங்காளதேசம், மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தீவிரவாத சந்தேகப் பேர்வழிகள் பிடிப்பட்டுள்ளனர். மேலும் பலரை வேட்டையாடும் தீவிர முயற்சியில் இலங்கை பாதுகாப்பு துறை ஈடுபட்டுள்ளது.  நேற்று நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில்  இன்று காலை வரை 269 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட குண்டுதாரி பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இந்நபர் காலையிலேயே ஹோட்டல் விருந்தினர்கள் கூட்டமாக  உணவருந்தும் பகுதியில், கையில் உணவுத் தட்டுடன் காத்திருந்த ஒரு வெளிநாட்டுக்காரர் என கண்டுபிடிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். வியாபாரம் காரணமாக இலங்கைக்கு வந்திருப்பதாக கூறிக்கொண்டு போலிப் பெயரில் அந்நபர் தன்னை பதிவு செய்து கொண்டிருந்தது கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது என ஹோட்டல் மேலாளர் தெரிவித்தார்.

அதே வேளையில் நீர்க் கொழும்பு தேவாலயத்தில் முதுகில் பையை சுமந்தவாறு உள்ளே சென்ற நபர் ஒருவரை கேமரா பதிவில் சோதனை செய்த குற்றப் புலனாய்வுத் துறை அப்பைக்குள் வெடிகுண்டுகள் இருப்பதை இப்போது கண்டுப்பிடித்துள்ளனர்.

மட்ட க்  களப்பு சியோன் தேவாலயத்தில் நடந்தது ஒரு தற்கொலை தாக்குதல் என நம்பப் படுகிறது. வெடிக்குண்டு நிரப்பப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் அந்த தற்கொலை பேர்வழி தேவாலயத்தினுள் புகுந்திருக்க கூடும் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker