Latestமலேசியா

இலங்கை குண்டு வெடிப்பு- மலேசியா உதவும் : சைபுடின்

கோலாலம்பூர், ஏப். 22 –  குண்டு வெடிப்பில் 200 பேருக்கு மேல் கொல்லப்பட்ட அசம்பவதத்திலிருந்து இலங்கை மீழ்ச்சி பெற மலேசியா உதவும் என வெளியுறவு அமைச்சர்  டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

தாம் இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் பேசியதாகவும் அந்நாட்டுக்கு மலேசியா உதவி செய்யும் என உறுதி கூறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வன்முறைத் தாக்குதலை மலேசியா கடுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கையில் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கொச்சிக்காடு, காட்டுவபிட்டியா, செயிண்ட் பார்னபஸ் ஆகிய தேவாலயங்களிலும் கொழும்பு சின்னாமன் கிரேண்ட், ஷங்ரிலா, கிங்ஸ்பெரி ஹோட்டல்களிலும் காலை 8.30 மணியளவில் குண்டு வெடிக்கப்பட்டதில், 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டு 400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

விஸ்மா புத்ராவின் அறிவிப்பின்படி அந்தக் குண்டு வெடிப்பில் மலேசியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker