Latestஉலகம்

ஒன்பதாவது குண்டு வெடித்தது – இலங்கையில் அடுத்த பயங்கரம் !

கொழும்பு, ஏப்ரம் 22 – நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்து சுமார் 290 பேர் உயிரிழந்த வேளை, இன்று ஒன்பதாவது குண்டு ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவம் கொச்சிக்கடா எனும் இடத்தில் நடந்துள்ளது. இது மக்களிடையே மேலும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அங்கு கார் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. காரில் குண்டு வைக்கப்பட்டிருந்ததை மோப்ப நாயின் உதவியினால் முன்கூட்டியே கண்டு பிடித்துவிட்டனர். அதனை செயலிழக்கச் செய்ய சுமார் 10 நிமிடங்கள் போராடியுள்ளனர் வெடிகுண்டு நிபுணர்கள். ஆனால் முயற்சி தோல்வி கண்டது.
இதனை அடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றம் செய்யப்பட்டனர். அந்த குண்டு வெடிப்பில் யாரும் காயமடையவில்லை.

நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் பிராத்தனையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் ஆங்காங்கே மொத்தம் 8 குண்டுகள் வெடித்தன.

புனித அந்தோணியர் ஆலயம், நீர் கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டகளப்பு சியோன் தேவாலயம், Shangrila, Cinnamon Grand, KINGBERRY ஆகிய 5 நட்சத்திர Hotel-கள், ஒரு வனப்பூங்கா அருகே மற்றும் ஒரு வீடு ஆகிய பகுதிகளில் வெடித்த குண்டுகளால் 290க்கும் அதிகமானோர்உயிரிழந்ததோடு 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் 35 வெளிநாட்டினர்களும் அடங்குவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker