Latestஉலகம்வாழ்க்கை

கம்போங் பாருவை வாங்க 10 பில்லியன் ரிங்கிட் தேவை – காலிட் சாமாட்

புத்ரா ஜெயா, ஏப். 22 – தலைநகரில் இருக்கும் கம்போங் பாரு வட்டாரத்தை மேம்படுத்த 6 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 10 பில்லியன் ரிங்கிட் வரை தேவைப்படும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சாமாட் தெரிவித்துள்ளார்.

இத்தொகை நகராட்சி பத்திரங்களை வழங்குதல் அல்லது வங்கிகளிலிருந்து கடன் வாங்குவது போன்ற நடவடிக்கை மூலம் திரட்டப்படும் என அவர் மேலும் கூறினார். அதில் உள்ள நிலங்கள் மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானவை என்றும் ஒரு நிலத்தில் பல உரிமையாளர்கள் இருப்பதால் அதனை மேம்படுத்துவது  மிகவும் சிக்கலானது என அவர் குறிப்பிட்டார்.

அந்த நிலத்து உரிமையாளர்கள், அதனை தனியார் மேம்படுத்துவதை விட அரசே மேம்படுத்துவதையே விரும்புகின்றனர் என கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது காலிட் அவ்வாறு குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker