Latestஉலகம்

கர்ப்பிணி வயிற்றைத் தொட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சுரேஷ் கோபி !

திருவனந்தபுரம், ஏப்.22- மலையாள திரையுலகில் அதிரடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த சுரேஷ் கோபி தேசியக் கட்சியான பாஜகவில் இணைந்தார். அந்தக் கட்சியின் ராஜசபா எம்.பியாகவும் மாறினார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜக வேட்பாளராக திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார் சுரேஷ்கோபி. அதனையொட்டி தற்போது தீவிரமாக அத்தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த வேளை, கர்ப்பணி பெண் ஒருவர், தனது வயிற்றில் வளரும் குழந்தையை ஆசிர்வதிக்குமாறு சுரேஷ் கோபியிடம் கேட்டுக் கொண்டார்.

சுரேஷ்கோபியும் காரில் அமர்ந்தப்படியே வெளியில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை மெதுவாக தொட்டு வாழ்த்தி விட்டு கிளம்பினார். அச்சம்பவம், எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு மெல்வதற்கு அவல் கிடைத்தது போல் ஆகி விட்டது. இது தொடர்பாக சுரேஷ்கோபியை மோசமான தரக்குறைவான விமர்சனங்களால் விமர்சித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker