Latestமலேசியா

குப்பையை வீசிய கணவன் மனைவி – ஆத்திரமடைந்து கத்தியால் தாக்கிய அண்டை வீட்டார்!

ஜோர்ஜ்டவுன், ஏப் 22- இன்று அதிகாலை 1 மணியளவில், பினாங்கு பாடாங் தெம்பாக் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கணவன் மனைவியை அண்டை வீட்டார் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
தாங்கள் வசிக்கும் 6வது மாடியிலிருந்து 5-வது மாடிக்கு குப்பைகளை வீசியுள்ளனர் இந்த தம்பதியினர். அப்படி அவர்கள் வீசிய குப்பை 5வது மாடியில் வசிக்கும் சம்பந்தப்பட்ட ஆடவரின் வீட்டில் நுழைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆடவர் கீழிருந்தபடியே அந்த கணவன் மனைவியை ஏசியுள்ளார்.

இந்த ஆடவன் ஏசியதை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த கணவன் மனைவி இருவரும் 5வது மாடிக்கு இறங்கி ஆந்த ஆடவரை ரொட்டி டின்னால் தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரிடம் சண்டையிட்டுள்ளனர். அந்த தகறாரின் போது, கத்தியால் தாக்கியவரின் அம்மாவை அந்த மனைவி கீழே பிடித்து தள்ளியுள்ளார். தனது தாயை கீழே தள்ளிவிட்டதால் கோபமடைந்த குற்றம் சாட்டப்பட்டவர் பழம் வெட்டும் கத்தியைக் கொண்டு அவர்களைத் தாக்க தொடங்கினார்.

இச்சம்பவத்தில் 40 வயதான கணவனுக்கு மார்பு மற்றும் வயிற்றில் காயமடைந்த நிலையில், 41 வயதான மனைவிக்கு மார்பு மற்றும் வலது முழங்காளில் காயமடைந்துள்ளது. அவர்கள் இருவரும் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களை கத்தியால் தாக்கிய  45 வயதுடைய குற்றச்சாட்டப்பட்ட அவர்களுடைய அண்டை வீட்டாரும் மூக்கு உடைந்து, வாய், கன்னம் வீக்கம் அடைந்து மற்றும் இடதுபக்க விரல்களில் கீரல் ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்ட விசாரனையில், அந்த குடியிறுப்பு பகுதில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் மூவரும் இடையே அடிக்கடி தகறாரு வரும் என்றும் , ஆனால் அது வாய் சண்டையாகவே இதுவரை இருந்தது என்றும் தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து அம்மூவரின் நிலமை சீரானதும் ஆவர்கள் போலீசாரால் விசாரிக்கபட்டு குற்றவியல் சட்டத்தின் 326-வது பிரிவின் கீழ் விசாரிக்கபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker