Latestமலேசியா

சட்டவிரோத அந்நியர்கள்- தாய்லாந்து அமலாக்கத் துறையே தூண்டியது

புத்ரா ஜெயா, ஏப். 22 – தாய்லாந்து அமலாக்கத் தரப்பினரே சட்டவிரோத அந்நியர்கள் மலேசியாவில் நுழைய மறைமுகமாக ஊக்குவித்ததாக வாங் கிலியான் புதைகுழி விசாரணை ஆணையத்தில் சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

பெர்லிஸ் பாடாங் பெசார் சிறப்புப் போலீஸ் பிரிவில் பொறுப்புத் தலைவராக இருந்த ஏஎஸ்பி ஜமாலுடின் ஷா முகமட் ஜவான், அந்த விஷயத்தை தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.

பாடாங் பெசாரில் கைது செய்யப்பட்ட அந்நிய நாட்டவர்கள், ஏற்கனவே தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

தாய்லாந்து தடுப்புக் காவல் இடங்களில் இடம் போதுமானதாக இல்லையென்றால், அந்த சட்டவிரோத அந்நியர்கள் தென் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவர் என ஜமாலுடின் தெரிவித்தார்.

நாக்கோம் சி தம்மாராட் இடத்திலிருந்து சடாஓ மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்டு, பாடாங் பெசாரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நியர்களை மலேசியாவுக்கு அனுப்புவதற்காகவே தாய்லாந்து அமலாக்கத் தரப்பினர் தற்காலிக தங்குமிடங்களை உருவாக்கியதாகவும் அவை சடாஓ மாவட்டத்தில்  கெந்திங் பெரா மற்றும் தங்க 100 எனும் இடங்களில் அவை அமைக்கப்பட்டடாகவும் அவை வாங் கிலியானில் அமைக்கப்பட்ட முகாம்களைப் போலவே இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker