Latestமலேசியா

நண்பனின் கல்யாண ஊர்வலத்திற்கு சென்றவர் சாலை விபத்தில் மரணம் !

கோலா பிலா, ஏப்-22- ஜாலான் கோலா பிலா அருகே காருடன் ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மதியம் 5:30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் 39 வயதுடைய அமாட் தாஜுடின் ஜஹாலன் என அடையாளம் காணப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி தலையிலும் உடலிலும் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சம்பவம் இடத்திலேயே உயிர்நீத்தார்.

சுசூகி பாந்தர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய அவ்வாடவர், அயர் ஹிதாம் எனுமிடத்தில் நடைப்பெற்ற கல்யாண விருந்து உபசாரிப்பில் கலந்து கொண்ட பின்னர், கோலாலம்பூரை நோக்கி பயணித்த வேளையில் ஜென்-2 எனும் காருடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

62 வயதுடைய அந்த கார் ஓட்டுனரான முகம்மட் ராசாலி முகம்மட்  தயிர், தன் தம்பியைத் துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையிலிருந்து ஃபெல்டா பாசோ 1-க்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போழுது எதிர் திசையிலிருந்து மோட்டார் சைக்கில்களோடு கும்பலாக வந்து கொண்டிருந்த சில மோட்டாரோட்டிகள் அவர்களின் முன் சென்றுக் கொண்டிருந்த காரை முந்திச் செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த அமாட் தாஜுடினின் மோட்டார் எதிர்திசையில் வந்து கொண்டுருந்த முகம்மட் ராசாலியின் காருடன் மோதிக்கொண்டதாக அவர் சொன்னார்.

கண்ணிமைக்கும் நோடியில் நடந்த இச்சம்பவத்தைத் தடுக்க முயன்ற போதிலும் தம்மால் அதை தடுக்க முடியவில்லை என ராசாலி சொன்னார்.

விபத்தில் மரணமுற்ற அமாட் தாஜுடினின் உடலை பரிசோதனைக்காகத் தடயவியல் அமைப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர், ஹஸ்லா பச்சோக் தெரிவித்தார்.

மேலும், இவ்விபத்துக்குறித்து  1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரணை செய்யப்படும் என ஹஸ்லா பச்சோக் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker