Latestமலேசியா

பகடிவதை செய்த மாணவன் – மன்னிப்புக் கோரிய தந்தை !

ஜொகூர், ஏப்.22 – இடைநிலைப்பள்ளி சீன மாணவர்கள் சிலர் கும்பலாக கூடி அதே பள்ளியைச் சேர்ந்த 13 வயது சீன மாணவனை பகடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களிப் பரவி மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

这种事情从以前到现在都没停止过,最好解决办法就是报警。不然就是江湖事江湖了。🤦🏻‍♂️新山一名16岁少年同数名同伴,在校外掌掴一名13岁男学生,在男学生脸上留下通红掌印!这起校外霸凌事件引发网民热议,纷纷开始搜索动手打人的少年背景,并吁请多个单位如教育部和警方关注这起事件。记者在脸书输入少年名字搜寻时,发现一名自称是少年父亲的男子于今早8时许,在其个人帐号发表的一则道歉贴文,恳请大家能给予孩子改过的机会,并请“各位脸书大神”原谅孩子的行为。

Posted by 沙巴人情味 on Tuesday, 16 April 2019

கடந்த ஏப்.17, ஜொகூர், தாமான் மெகா ரியா இடைநிலைப்பள்ளியின் வெளி வளாகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அந்தக் காணொளியில், 13 வயது மாணவனை, 16 வயதுடைய மாணவன் மற்றும் அவன் நண்பர்கள் சிலர் சுற்றி வளைத்து அச்சிறுவனை கேலி செய்தும் ஏளனமாக பார்த்தும் சிரிக்கின்றனர். பின், அதில் ஒரு மாணவன் திமிராக உட்கார்ந்துக் கொண்டு அந்த சிறுவனை ‘பளார்’ என்று அறைகிறான். அவனின் செயல் தன் நண்பர்கள் முன் தன்னை ‘கெத்தாக’ காட்டிக் கொள்ளும் விதத்தில் அமைந்திருந்தது.   
 
இதற்கிடையில், இச்சம்பவத்தை அடுத்து, அந்தச் சிறுவனை அறைந்த மாணவனின்  தந்தை முகநூலின் வழி பொது மக்களிடம் மன்னிப்பு கோரி தன் மகனுக்கு திருந்த ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டுள்ளார்.

“இந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பே என் மகன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டான். அவன் செய்த இந்த தவற்றை நான் எடுத்துரைக்கின்றேன். அவன் திருந்துவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தாருங்கள். ஒரு தந்தையாக நான் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என தனது முகநூலில் அந்த தந்தை இவ்வறு குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker