Latestமலேசியா

பல்கலைக்கழக நுழைவு; இன அடிப்படையில் வேண்டாம்; திறன் அடிப்படையில் –கெராக் அமைப்பு.

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – பொது பல்கலைகழகங்களின் மாணவர் சேர்ப்பு இன அடிப்படையில் அல்லாமல், திறன் அடிப்படையில் இருக்க வேண்டும் என கெராக் எனும் கல்வியாளர்கள் குழு வலுயுறுத்தியுள்ளது.

நாட்டில் 100க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களும் கல்லூரிகளும் உள்ள நிலையில் அவை அனைத்தும் தனித்தனியே மாணவர் சேர்ப்பை நடத்த முடியும். பழைய நிலையிலான மையப்படுத்தப்பட்ட மாணவர் தேர்வு முறை இந்த காலக்கட்டத்துக்குப் பொருந்தாது என கெராக் அமைப்பின் பொது செயலாளர் ரோஸ்லி மஹாட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நாம் நாட்டின் பிரதிநிதியாக ஒலிம்பிக் போட்டியாளரை தேர்ந்தெடுக்கும் போது அவர் எந்த இனம் என பார்ப்பதில்லை. அவரிடம் திறன் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறோம். அதே போல் மருத்துவரை பார்க்கும் போது நான் மலாய் மருத்துவரை பார்க்க வேண்டும் அல்லது சீன மருத்துவரை பார்க்க வேண்டும் என கேட்பதில்லை. சிறந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். அதே போல காவல்துறையில் சிறந்த விரிவுரையாளர்கள் வேண்டும் என கேட்கிறோம்.

நிலைமை அப்படி இருக்க நாம் பட்டப்படிப்புக்கு மாணவர்களை ஏன் இன ரீதியில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுடைய தேர்வு அடைவுநிலையை வைத்து சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதே நியாயம் என ரோஸ்லி மேலும் தெரிவித்தார். 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker