மலேசியா

மெட்ரிகுலெஷன் பிரச்சினையைத் தீர்க்க வழிகள் –எட்மன்ட் சந்தாரா முன்மொழிவு !

கோலாலம்பூர், ஏப். 22 – சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ டாக்டர் எட்மன்ட் சந்தாரா. தாம் மெட்ரிகுலேஷன் பிரச்சனையை முன்னமே எதிர்பார்த்து அதனை மக்களவையின் கவனத்துக்கு கொண்டுச் சென்றதாக ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் அது பற்றி 3 மூன்று முறை கல்வி அமைச்சரிடமும் துணைக் கல்வி அமைச்சரிடமும் அதனை எழுப்பியதாகவும், மாணவர் சேர்க்கையில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரலாம் என பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார்.

அந்தப் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டிருந்தால் அந்த விவகாரம் இந்த அளவுக்கு பூதாகரமாக உருவெடுத்திருக்காது. மேலும், குறுகிய காலத்தில் கூடுதலான மெட்ரிகுலேஷன் இடங்களை அரசு அதிகரிக்கவும் முடியாத நிலை இருக்கிறது.
அவர் தனது அறிக்கையில் கூறுவதாவது;
நீண்ட கால தீர்வாக வரும் காலங்களில் மொத்த கல்வி வாய்ப்பில், 75.8 விழுக்காட்டு கல்வி வாய்ப்பை பூமிபுத்ராக்களுக்கு வழங்கும் வேளையில், 15.2 விழுக்காடு வாய்ப்பினை பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வழங்கலாம். மேலும் இருக்கின்ற 10 விழுக்காடு வாய்ப்பினை சிறந்த தேர்ச்சி அடிப்படையில் இனம் பாகுபாடில்லாமல் வழங்கலாம். இது அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு திட்டமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இடைப்பட்ட காலத்தில், அரசு வசூலித்து வரும் சுக்காய் ஹராம் எனச் சொல்லப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் 5 கோடி ரிங்கிட் நிதியைப் பயன்படுத்தி தனியார் மற்றும் உயர்கல்வி கல்விக் கழகங்களில் இருந்து இடங்களை வாங்கலாம்.

ஒவ்வோர் ஆண்டும் அரசு 5.7 மில்லியனிலிருந்து 5.8 மில்லியன் ரிங்கிட்டை சூதாட்டம் மற்றும் மது விற்பனையின் மூலம் வசூலிக்கின்றது.

இந்த 5 கோடி ரிங்கிட்டை வைத்துக் கொண்டு, 30 தனியார் துறை மேல் கல்விக் கழகங்கள் ஒவ்வொன்றும் 100 இடங்களைப் பாதி விலைக்கு மெட்ரிகுலேஷன் வகுப்புகளை நடத்த முன்வந்தால், 2,500 லிருந்து 3,000 வரைக்குமான கூடுதல் இடங்களை உருவாக்க முடியும். இது அரசும் தனியார் துறையும் இணைந்து செய்யும் கூட்டு முயற்சியாகவும் இருக்கும்.

இந்த முறையின் கீழ் உடனடியாக இடம் கிடைக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும் என எட்மண்ட் சந்தாரா குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker