Latestமலேசியா

“Malu Apa Bossku” என நஜிப் அடையாளம் காட்டப்பட்டார்-நீதிமன்றத்தில் சிரிப்பலை

கோலாலம்பூர், ஏப். 22 – நஜிப் ரசாக்கின் எ ஆர்சி வழக்கில் 10ஆவது சாட்சியானவர் நஜிப்பை ‘மாலு அப்ப போஸ்கு’ (வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது’ என கூறி அடையாளம் கூறினார்.

ஜோகூர் பாரு அம்னோ தொகுதி செயலாளரான அபு தாலி அலியாஸ் தொகுதித் தலைவர் டான்சிறீ ஷாரிர் அப்துல் சாமாட் கேட்டுக் கொண்டதற்கிணங்க  2015ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று 300, 000 ரிங்கிட்டுக்கான காசோலையைப் பெற்று அவற்றை தங்களின் தொகுதிக் கணக்கில் சேர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.

தமது தொகுதியின் கீழ் 86 கிளைகள் இருந்ததால் அவற்றின் நிர்வாகச் செலவுக்கு அந்தப் பணம் போதாது என்றும் குறைந்தது 600,000 ரிங்கிட்டாவது தேவைப்படும் என அவர் தெரிவித்தார்.

அந்தப் பணம் கிளைகள் சமூக, பண்டிகை தினம் மற்றும் உறுப்பினர்களுக்கான நலன் சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்த செலவு செய்யப்பட்டது.

தாம் நஜிப்பிடமிருந்து 3 முறை அம்மாதிரியான காசோலைகளைப் பெற்றதாக அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் உள்ள அம்னோ தொகுதிகள் உட்பட 15 பேர் மொத்தம் 1 கோடியே 77 ஆயிரம் ரிங்கிட்டை நஜிப்பிடமிருந்து பெற்றதாகவும் அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker