Latestமலேசியா

அருணாசலம் நீதிமன்ற அவமதிப்பு – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா, ஏப். 23 –  பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த வழக்கறிஞர் அருணாசலம் குற்றம் செய்துள்ளதாக கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டத்துறைத் தலைவர் டோம்மி தோமஸ் கொண்டுவந்த  அந்த மனுவை கூட்டரசு நீதிமன்ற  5 நீதிபதிகள் கொண்ட அமர்வு,   அவர் நீதிமன்றத்தை அவமதித்தார் என கூறி, அவரின் மன்னிப்புக் கோரலுக்குப் பின்னர் தண்டனை அறிவிக்கப்படும் என அறிவித்தது.

அருணாசலம் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து அலிரான் பத்திரிகையில் எழுதியிருப்பது நீதித் துறையை சிறுமை படுத்தும் செயல் என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

முறையீட்டு நீதிபதி அப்துல் ஹமிட் அபு பாக்கார்  நீதித்ததுறையில்  ஊழல் என்ற அறிக்கையைத் தாக்கல் செய்தது சம்பந்தமாக அருணாசலம் தமது கட்டுரையில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker