Latestசினிமா

சினிமாவை விட்டு விலகியது ஏன் நடிகை ரிச்சாவின் அதிர்ச்சி புகார்!

சென்னை, ஏப் 24- தன்னுடைய சினிமா வாழ்க்கை மோசமாக இருந்ததாக கூறிய நடிகை ரிச்சா நடிக்க வாய்ப்பு கேட்கும் போதெல்லாம் படுக்கைக்கு அழைத்ததாலேயே தான் சினிமாவை விட்டு விலகியதாக கூறியுள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிவரும் பெண்களை நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

இந்தித் திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் இந்தப் புகாரில் சிக்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு, பட உலகிலும் நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.  இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ரிச்சா பத்ராவும் பாலியல் தொல்லையில் சிக்கியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

இவர் 2002 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் இவர். அதிக படங்களில் நடித்துக் கொண்டு இருந்த போதே திடீரென சினிமாவை விட்டு விலகினார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

சினிமா வாழ்க்கை குறித்து ரிச்சா கூறியதாவது:- என் சினிமா வாழ்க்கை மிக மோசமாக இருந்தது. நடிக்க வாய்ப்பு கேட்கும் போதெல்லாம் படுக்கைக்கு அழைத்தனர். இதனால் தான் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். திருமணம் செய்து கொண்ட பிறகு நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போதும் என்னை படுக்கைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினர். இதனால் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு கட்டி இப்போது முழுமையாக ஒதுங்கி விட்டேன் இவ்வாறு ரிச்சா கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker