Latestமலேசியா

ஸ்பெயினின் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவுக்குள் கடத்தலா?

போர்ட் கிள்ளான், ஏப். 24 – உள்நாட்டு நிறுவனம் ஒன்று பொய்யான  அறிவிப்பு தந்து  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் கழிவுகளை மலேசியாவுக்குள் கடத்தி வந்தது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

போர்ட் கிள்ளான் துறைமுகத்தில் வந்திறங்கிய கொள்கலன்களைச் சோதனை இட்டபோது இது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்தக் கொள்கலன்களில் சுத்தமான பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் கழிவுகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் இயோ பீ இன் தெரிவித்தார்.

விதிமுறைகளின்படி சுத்தமான பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்ய மலேசியாவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதி அளித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் அசுத்தமான பிளாஸ்டிக் பொருள் கழிவுகளை உள்ளடக்கிய 24 கொள்கலன்களும் அந்த நாட்டுக்கே திரும்பி அனுப்பப்படும். அதே சமயத்தில் மறுசுழற்சி செய்யும் 300 தொழிற்சாலைகளில் 148 மூடப்பட உத்தரவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker