Latestமலேசியா

கிரேன் விழுந்ததில் ஓட்டுனர் உடல் நசுங்கி மரணம் !

ஶ்ரீ இஸ்கண்டார், ஏப், 25- இங்குள்ள ஜாலான் ஈப்போ லூமுட்டில் இருக்கும் வீடுக்கட்டுமான தளத்தில் நேற்று கிரேன் ஓட்டுனர் ஒருவர் 20 டன் எடையை தூக்கும் கிரேன் அவர் மேலே விழுந்ததில் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

நேற்று மதியம் 12.20 மணியளவில், கம்போங் பெர்சாமை சேர்ந்த கிரேன் ஓட்டுனரான 47 வயதுடைய லாய் கிம் சோய் உடலில் படுகாயம் அடைந்து சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

லாய் கிம் சோய் செலுத்திய கிரேன் கட்டுமான தளத்தின் கிழே இருந்து கற்களை ஒன்றாவது மாடிக்கு எடுத்துச் செல்லும் போது அவர் ஓட்டிய கிரேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது என்று பேராக் மாவட்ட போலிஸ் துணைத் தலைவர் நிக் ரொஸ்லி நிக் யாயா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் மரணம் அடைந்த கிரேன் ஓட்டுனர், அந்த கிரேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழும் நிலையில் உள்ளதை அறிந்து அதை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரால் வெளியேற முடியாமல் அதனுள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்ததாக நிக் ரொஸ்லி நிக் யாய மேலும் தெரிவித்தார்.

தொடக்கக் கட்ட விசாரணையில் இது ஒரு தொழில்நுட்ப கோளாரால் ஏற்பட்ட விபத்து என்று கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகை செய்யப்பட்டு சங்காட் மெலிந்தாங் மருத்துவமனை சவ பரிசோதனையின் முடிவில் இறந்தவர் உடலில் பலத்தக்காயங்கள் ஏற்பட்டு இறந்ததாக வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இறந்தவரின் பாதி உடல் கிரேனிலே சிக்கிக் கொண்டதால் அவரை மீட்கும் நடவடிக்கை சிரமமாக இருந்தது எனவும், இதனால் மற்றொரு கிரேனைக் கொண்டு சம்பந்தப்பட்டவரின் உடலை மீட்டதாகவும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் தலைவர் ரொஸ்லான் அமாட் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker