Latestமலேசியா

ஜோகூர், ஏப்.25 – ‘Avengers : Endgame’ திரைப்படத்தை, திரையரங்கில் கைத்தொலைபேசி மூலம் பதிவு செய்ய முயன்ற 11 நபர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

இத்திரைப்படத்தின் முதல் காட்சி நேற்றுதான் வெளியிடப்பட்டது. படம் ஒளியேறிக் கொண்டிருக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் இவர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது ஜொகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் இயக்குனர் முகமட் ஹைருல் அன்வார் போரோ தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பதையும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, மார்வல் மலேசியா, தனது மலேசிய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், நேற்று சுமார் 300 ட்ரோன் எனப்படும் பறக்கும் காமிராக்களை கொண்டு, இத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் முத்திரைகளின் ஒளி நிகழ்ச்சியை கோலாலம்பூர் கோபுரம் அருகே பாய்ச்சினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker