Latestஇந்தியாஉலகம்

ஆண் குழந்தை பிறக்கவில்லை; 4 பெண் குழந்தைகளையும் கொலைச் செய்ய தந்தை முயற்சி !

இந்தியா, ஏப் 26- இந்தியாவில் உள்ள பிஹார் பகுதியில்  ஆடவன் ஒருவன் தனக்கு ஆண் குழந்தை பிறக்காததால் அவருக்கு பிறந்த மற்ற 4 பெண் குழந்தைகளையும் பாலத்தின் மேல் இருந்து தூக்கி வீசியுள்ளான்.

இச்சம்பவத்தை அடுத்து அந்த ஆடவனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலிசார் கைது செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார், போலீஸ் சுப்ரின்டன் கார்திக்கேயா சர்மா.

நன்டு யாடாவ் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆடவன் தன்னுடைய இரண்டு வயதிலிருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட 4 பெண் குழந்தைகளையும் மோட்டார் வாகனத்தில்  ஏற்றிக் கொண்டு, சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் அழைத்துச் சென்று இந்த கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளான்.

இந்த கொலை முயற்சியை அறிந்த அக்கிராம வாசிகள் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பாலத்தின் கீழே வீசி எரியப்பட்ட அந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

சம்பந்தப்பட்ட 4 குழந்தைகளிள் ஒரு குழந்தை இறந்து விட்டதாகவும் மற்ற மூன்று குழந்தைகளும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதே வேளையில் அந்த குழந்தைகளை மீண்டும் கொலைச் செய்ய அந்த ஆடவன் அவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வந்துள்ளான். இதனை அறிந்த மக்கள் அவரை போலிசாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker