Latestமலேசியா

கிரேடல் இயக்குனர் கொலை – வீட்டுக் காவலில் இருக்க மனைவி கோரிக்கை

புத்ரா ஜெயா, ஏப். 26 – நஸ்ரின் ஹசானை கொன்றதாகக் கைது செய்யப்பட்ட வழக்கில் அவரின் மனைவி சமீரா முஸாபர் வீட்டுக் காவலில் இருக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருக்கிறார்.

தாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு மாறாக 24 மணி நேரமும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டால், தமது 4 பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் வேண்டுகோளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து,  அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதனை எடுத்துச் சென்றுள்ளார்,

அவரின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ ஷாபி அப்துல்லா, 2018ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பந்தமாக சமீரா 9 மாதங்கள் கழித்தே கைது செய்யப்பட்டதாகவும், அந்தக் காலக் கட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு  விடுவிக்கப்பட்டார்.  அவர் பிணையில் இருந்தபோது சட்டத்துக்கு எதிராகச் செயல்படவில்லை.  அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட 13 மற்றும் 16 வயது இளைஞர்கள் ரிம. 50,000 பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஜாமில் அரிஃபின், கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு கூடுதல் காரணங்களைக் கொண்டுவர,  வழக்கு மே 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த மனுவை முறையீட்டு நீதிபதிகள் கமார்டின் ஹாஷிம், ரோட்சாரியா பூஜாங், முகமட் ஸபிடின் முகமட் டியா ஆகியோர் செவிமடுத்தனர்.

கிரேடல் நிறுவனத்தின் நஸ்ரின் (வயது 47) என்பவரை அவரது மனைவி சமீரா, அவரின் இரண்டு புதல்வர்கள் மற்றும் இந்தோனேசிய பணிப்பெண் ஆகியோர் முத்தியாரா டாமான்சாரா வீட்டில் 2018ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இரவு 11.30லிருந்து காலை 4 மணி வரை கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker