Latestமலேசியா

வீடமைப்பு பகுதியில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு !

சிரம்பான், ஏப்.26 – ஜாலான் துன் டாக்டர் இஸ்மாயிலில் அமைந்துள்ள சாதாரண வீடமைப்பு மேம்பாட்டு பகுதியின் அருகே புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் அமைந்துள்ள ஒரு கடையின் அருகே பராமரிப்பற்ற இடத்தில் அப்பெண்ணின் சடலம் கிடப்பதாக சுமார் காலை 10 மணியளவில் 60-வது வயது மாதுவிடமிருந்து தகவல் கிடைத்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் அதிகாரி முகம்மட் ரோஸ்லி இசாக் தெரிவித்தார்.
அந்த மாது கூறியதாவது; சுமார் 9.30 மணி அளவில் என் கடை அருகே உள்ள புல் மண்டிய இடத்தில் மணலை தோண்டி, மீண்டும் புதைக்கப்பட்டு, அதன் மேல் தேங்காய் மட்டை மற்றும் பலகையை கொண்டு மூடியிருந்ததாக அவர் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்த பெண்னின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்ட தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக முகம்மட் ரோஸ்லி உறுதிப்படுத்தினார்.
மேலும், துணியால் சுற்றப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைக்காக துங்கு ஜாபார் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேல் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாவும், அதுவரையில் இச்சம்பவம் தீடீர் மரணமாக கருதப்படுவதாகவும் முகம்மட் ரோஸ்லி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker