Latestமலேசியா

அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்; 222 பேர் உடனடியாக இடமாற்றம் !

கோலாலம்பூர், ஏப்.27- தாமான் கெராமாட் பெர்மாய், 5 மாடி குடியிறுப்பின்  புலோக் ஃப் எயு1பி-ல் (blok F AU1B) உள்ள வீடுகளில் ஏற்பட்ட விரிசலில் 37 அடுக்குமாடி வீடுகளிருந்த 222 குடியிருப்பாளார்களை அசர அசரமாக இடமாற்றம் செய்ய உத்தரவிடபட்டுள்ளது.

நேற்று காலை 10 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த சிலாங்கூர் பேரிடர் நிர்வாக குழுவினர் ஆரம்பக்கட்ட சோதனையில் சுமார் 10 விரிசல் தடையங்களை கண்டுப்பிடித்த்தாகப் பேரிட நிர்வாகக்  குழுத் தலைவரான அமாட் ஃபைருஸ் முகமட் யுசோப்  தெரிவித்தார்.

பின்னர், அங்கு மேற்கொண்ட தொடர் சோதனையில் வீடுகளில் ஏற்பட்ட விரிசல்களின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அங்கு குடியிருந்த குடியிருப்பாளார்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் பேரிட நிர்வாக குழு ஈடுப்பட்டனர்.

மேலும், உடனடி இடமாற்றம் குறித்த அறிக்கை நேற்று பின்னிரவு 12 மணியளவில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து  தாமான் கெரமாட் இடைநிலைப்பள்ளியைத் தற்காலிக இடமாற்ற பகுதியாக அறிவித்துள்ளதாக அமாட் ஃபைருஸ் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பின்னிரவு மணி 12- யளவில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் போலீசாரின் அறிவுறுத்தலுக்கு இணங்கி அக்குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்ததாகவும் முகமட் ஃபைருஸ் தெரிவித்தார்.

குடியிருப்பாளர்களின் உயிர் மட்டுமே தற்போது முக்கியமாக கருதப்படுவதால்  குடியிருப்பாளர்களை மிகப் பெரிய பொருட்களை அப்புறப்படுத்துவதை விட, தற்போது தேவைக்கூரிய பொருட்களை மட்டும் தங்களுடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker