Latestமலேசியா

சங்கிலி திருடன் பிடிபட்டான்!

கோலாலம்பூர், ஏப். 27 – தலைநகர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஆடவரின்  கழுத்துச் சங்கிலியை பறிக்க முயன்ற திருடன் கைது செய்யப்பட்டான்.

வெள்ளிக்கிழமை, காலை 11.20 மணியளவில் சம்பந்தப்பட்ட ஆடவர் சாலையின் அருகில் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் திருடன் அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்துள்ளான். எனினும், அதனை உணர்ந்த அந்த ஆடவர் பக்கத்தில் ஒதுங்கியதால் சங்கிலி கீழே விழுந்துள்ளது.

திருடன் தப்பித்து  ஓடியபோது பாதிக்கப்பட்ட ஆடவரின் மைத்துனன் அவனை விரட்டிக் சென்றுள்ளார்.

தப்பித்துச் சென்ற அந்தத் திருடன் மீண்டும் அதே இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட ஆடவரைத் தாக்கி காயப்படுத்தி இருக்கிறான். எனினும், அங்கு நடந்த மோதலில் அவன் கீழே விழுந்து கால், வாய் மற்றும் கன்னத்தில் காயம் ஏற்பட்ட  வேளையில் ஆடவருக்குக் கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

டாங் வாங்கி போலீசார் அத்திருடனை கைது செய்ததோடு அவனது மோட்டார் சைக்கிள்,  கைப்பை முதலியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

சோதனையில் அவனுக்குப் போதைப் பொருள் குற்றச்சாட்டு இருப்பதாகவும் அவன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அவனது தோள் பையில் இரண்டு கைப்பேசிகள், ஒரு பணப்பை, ஒரு வாக்கி டோக்கிக் கருவி, நிறுத்தல் இயந்திரம், மோட்டார் சைக்கிள் சாவிகள், மோட்டார் சைக்கிளைத் திருடும் உபகரணங்கள் முதலியவற்றைக் கண்டெடுக்கப்பட்டன.விசாரணைக்காக அந்தத் திருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker