Latestமலேசியா

சண்டாக்கான் இடைத்தேர்தல் – 5 முனைப் போட்டி !

சண்டாக்கான், ஏப். 27 – சபா, சண்டாக்கான் நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தலில் ஐவர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜசெக மற்றும் பார்ட்டி பெர்சத்து சபாவின் வேட்பாளர்களை எதிர்த்து 3 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அந்த 5 போட்டியாளர்களும் தியோங் ஹுவா இடைநிலைப்பள்ளியில் இன்று காலை 9லிருந்து 10 மணி வரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஜசெகவைப் பிரதிநிதித்து விவியன் வோங் ஸர் யீ(வயது 30), பார்ட்டி பெர்சத்து சபாவின்(பிபிஎஸ்) டத்தோ லிண்டா ட்சென் தாவ் லின்(வயது 63) சுயேச்சைகளாக ஹம்சா அப்துல்லா, வர்த்தகர் சிய சியூ யுங்(வயது 45)முன்னாள் அரசியல்வாதி சுலைமான் அப்துல் சாமாட்(வயது 36)ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சண்டாக்கான் தொகுதியில் 51 விழுக்காட்டு சீனர்களும் பாஜாவ், சூளுக்ஸ் மற்றும் சுங்கை ஆகிய இன மக்கள் அடங்கிய 45 விழுக்காட்டு முஸ்லிம் பூமிபுத்ராக்களும் உள்ளனர்.

சண்டாக்கான் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஸ்டீபன், மார்ச் 28ஆம் தேதி மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 14ஆவது பொதுத்தேர்தலில் ஸ்டீபன் 10,098 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker