Latestஇந்தியா

தமிழகத்தைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்: பெங்களூர் போலிஸ் தகவல்!

சென்னை, ஏப் 27- தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலிஸ் தமிழக போலிசுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பி இருக்கிறது. இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் பலியானார்கள். 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று பெங்களூர் போலிஸ் தமிழக போலிசுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதில் ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. ரயில்களில் குண்டு வைக்க போவதாக தகவல் வந்தது. எங்களுக்கு வந்த தொலைபேசி தகவலில் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, டாக்சி ஒட்டுநர் சுவாமி சுந்தர் என்பவர் தகவல் அளித்தார். ஓடும் ரயில்களில் குண்டு வைக்க வாய்ப்புள்ளது. முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காவல் துறை டிஎஸ்பிக்கு பெங்களூரு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழக காவல்துறையை கவனமாக இருக்கும்படி அரசின் முதன்மை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தும்படி போலிசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெடிகுண்டு நிபுணர்களும் தேடுதல் வேட்டையை துவங்கி இருக்கின்றனர். இத்தகவல் காரணமாக தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker