Latestஇந்தியா

துபாயில் ஆபாச நடனம்; அம்மாவுக்கு எதிராக மகள் பரபரப்பு புகார்!

சென்னை, எப்ரல். 27- துபாயிலுள்ள கேளிக்கை விடுதியில் ஆபாசமாக நடனம் ஆடவைத்தும் தகாத தொழிலில் தன்னைக் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்ததோடு தம்மைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகளும் தொலைக்காட்சி புகழ் நடனமணியுமான கேண்டி என்பவர்  போலீசில் புகார் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஆர். விஜயலெட்சுமி என்பவர்.  அவருக்கும் அவருடைய கணவருக்கும் எதிராக கேண்டி  புகார் செய்துள்ளார். இவர், ‘மானாட மயிலாட..,’ என்ற பிரபல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் விளக்கினார். அதில் கேண்டி மேலும் கூறியிருப்பதாவது:

”என்னுடைய தாயார் விஜயலெட்சுமி இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவரும் என் அப்பாவும் என்னை கடந்த ஓராண்டுக் காலமாக துபாயில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நடனம் ஆடவைத்து அதில் கிடைக்கும் பணத்தில் பிழைத்து வருகிறார்கள்.

இதுபோன்று ஆபாசமாக நடனம் ஆடுவதில் எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. உடன்பாடும் இல்லை. அதனால் துபாயில் இருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் வந்து தங்கிவிட்டேன்.

ஆனால் கடந்த 23ஆம் தேதி என் தாயார் விஜயலெட்சுமியும் தந்தையும் சில அடியாட்களுடன் வந்து என்னை அடித்துக் கொடுமைப்படுத்தி இழுத்துச் சென்றார்கள். அங்கிருந்த பொதுமக்கள் என்னை காப்பாற்றி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அதன் பின்னர் என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

என் அம்மா போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதால் போலீஸ் நிலையத்தில் அவருக்கு எதிரான புகாரில் அலட்சியம் காட்டுகிறார்கள்.   இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு அளித்த என் அண்ணனின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கேண்டி  தன்னுடைய பெற்றோருக்கு எதிரான புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker