Latestமலேசியா

பிரதமர் பதவி – நேரம் வரும்போது, மகாதீர் விலகுவார்

கோலாலம்பூர், ஏப். 27 – அண்மையில் ஜொகூரில் மந்திரி பெசார் பதவி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் மாநில சுல்தான் தலையிட்டதால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டது.

தமது பரிந்துரையை மீறி, புதிய மந்திரி பெசார் 3 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களை மாற்றியுள்ளதில் அதிருப்தியுற்ற மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலக நினைப்பதாகக்  கூறப்படுகிறது.

தேர்வு செய்யப்பட்ட அரசே ஆட்சிக்குழுவை தேர்ந்தெடுக்கும் உரிமையைப்  பெற்றிருப்பதாகவும் அதில் அரண்மனை தலையிடக் கூடாது என மகாதீர் உறுதியாக இருக்கும் வேளையில், ஜொகூர் சுல்தானே அதனை தீர்மானிப்பார் என ஜொகூர் பட்டத்து இளவரசர் வம்புக்கு நிற்கிறார்.

இதனிடையே ஜொகூர் பிரிபூமி பெர்சத்துவில் மோதல் என வதந்தி நிலவியதால், அக்கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் தலையிட்டு,  மகாதீருக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்து மாநில நிர்வாக விவகாரங்களில் சுல்தான் தலையிட வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், மகாதீர் பிரதமர் பதவியை எப்போது விட்டு விலகுவார் என வாதப் பிரதிவாதங்கள் தலை தூக்கியிருக்கின்றன. அவருக்கு எதிராக சதி நடப்பதாகவும் வதந்தி நிலவுகிறது. அடுத்த பிரதமராகக் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்வார் இப்ராஹிம் தமது ஆதரவை மகாதீருக்கு வெளிப்படுத்தி இருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் பிரச்சினையைக் கிளப்பிய வண்ணமாக இருக்கின்றனர்.

மகாதீர் தமது 93ஆவது வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார். நேரத்தோடு அலுவலகத்ததுச்  சென்று அலுவல்களைக் கவனிப்பதாகவும், ஒரே நாளில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு ஓய்வில்லாமல் உழைப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

அரசின் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு சிங்கப்பூருக்கான அதி வேக ரயில் திட்டத்தை ஒத்தி வைத்து, கிழக்குக்கரை ரயில் திட்டத்தின் செலவினைக் குறைத்து அத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தவும், எம்ஆர்டி2 மற்றும் எல்ஆர்டி 3 ஆகிய திட்டங்களின் செலவைக் குறைத்து தொடரவும், ஊழல் நடவடிக்கைகளை வெகுவாகக் குறைத்தும், ஊழல் செய்தோரின் மீது வழக்கைத் தொடர்ந்தும் அரசின் நிர்வாகத் திறனைப் பெருக்கி வருகிறார்.

இவற்றைக் கணிக்கும் பெரும்பாலோர், அவர் தொடர்ந்து அடுத்த பொதுத்தேர்தல் வரைக்கும் பிரதமர் பதவியில் நீடிக்க   வேண்டுமென விரும்புகின்றனர். அது பற்றிக் குறிப்பிடும் முன்னாள் நிதியமைச்சரான டான் ஶ்ரீ டாயிம் ஸைனுடின், மகாதீர் தாம் ஒப்புக் கொண்டது போல இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்னரே கூட, நேரம் கனிந்து வரும்போது 

இவற்றைக் கணிக்கும் பெரும்பாலோர், அவர் தொடர்ந்து அடுத்த பொதுத்தேர்தல் வரைக்கும் பிரதமர் பதவியில் நீடிக்க   வேண்டுமென விரும்புகின்றனர். அது பற்றிக் குறிப்பிடும் முன்னாள் நிதியமைச்சரான டான் ஶ்ரீ டாயிம் ஸைனுடின், மகாதீர் தாம் ஒப்புக் கொண்டது போல இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் முன்னரே கூட, நேரம் கனிந்து வரும்போது பிரதமர் பதவியை விட்டு அகலுவார் என உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker