Latestமலேசியா

மகாதீர், முகைதீன் இடையே பிளவு இல்லை – அர்மாடா

கோலாலம்பூர், ஏப். 27 – பிரிபூமி பெர்சத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களான துன் மகாதீர் மற்றும் டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கும் இடையே எந்தப் பிளவும் இல்லை என பிரிபூமி பெர்சத்து கட்சியின் சிலாங்கூர் இளைஞர் பிரிவான அர்மாடா தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவருக்கும் இடையே சிறந்த உறவு நிலவுவதாகவும் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சியினரே அம்மாதிரியான வதந்தியை உருவாக்கி பரப்பி வருகின்றனர் என சிலாங்கூர் அர்மாடாவின் தலைவர் அடிஃப் ஸியான் அப்துல்லா தெரிவித்தார்.

பெர்சத்து தற்போது பலமுள்ள கட்சியாக  உருவெடுத்துள்ளதாகவும், சபாவில்  ஆயிரக் கணக்காணோர் கட்சியில் சேர்வதாகவும் தெரிவித்த அவர்,  கட்சி மலாய்க் காரர்களின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கட்சியில் பிளவும் பிரிவினையும் இல்லை என்றும் அர்மாடா உயர்மட்டத் தலைவர்களுக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker